கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க கோரி முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது. கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி காவலாளி ஒருவர் 11 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த முக்கிய ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த கும்பலில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் அதே ஏப்ரல் மாதம் கார் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு வழக்கில் இதுவரை சுமார் 230 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 5 வருடங்களாக உதகை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து நடந்த உயிரிழப்புகள், கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது சிபிசிஐ விசாரித்து வருகிறது.
இதனிடையே சமீப நாட்களாக கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் பேட்டியளித்த வருகிறார். அவர் கூறுகையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் எனது சகோதரர் கனகராஜ் சில விஷயங்களை செய்தார்.
எனது சகோதரர் கனகராஜ் விபத்தில் உயிரிழக்கவில்லை, கொலை செய்யப்பட்டார் என இபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பல்வேறு திடுக்கிடும் தகவலை தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனது செல்வாக்கை குறைக்கும் வகையில் தனபால் பேட்டியளித் வருகிறார். கோடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ரூ.1.10 கோடி நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடக்கோரி தெரிவித்திருந்தார். எடப்பாடி பழனிசாமி மனு இன்று நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி, எடப்பாடி பழனிசாமி மனு மீதான விசாரணை இன்று வருகிறது.
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…