களை எடுக்கப்பட்டுவிட்டது.! அதிமுக பயிர் செழிப்பாக வளர்கிறது.! இபிஎஸ் பேச்சு.!
அதிமுகவில் தேவையில்லாத களை எடுக்கப்பட்டுவிட்டது இனி அதிமுக பயிர் செழிப்பாக வளர்ச்சி விளைச்சல் தரும் – இபிஎஸ் பேச்சு.
தஞ்சாவூரில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டு இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் தேவையில்லாத களை நீக்கப்பட்டு விட்டது என ஓபிஎஸ் உள்ளிட்டோரை மறைமுகமாக குறிப்பிட்டார். அடுத்ததாக இனி அதிமுக எனும் பயிர் செழிப்பாக வளர்ந்து நல்ல விளைச்சலை தரும் என குறிப்பிட்டார்.
மேலும், அதிமுகவில் தனிமனித அதிகம் கிடையாது. அதிமுகவை யாராலும் அளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார் .