பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் எடப்பாடி பழனிச்சாமியின் முதல் ட்வீட்..!
பாமக நிறுவனர் ராமதாசுக்கு நன்றி தெரிவித்து ஈபிஎஸ் ட்வீட்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். அந்த ட்விட்டர் பதிவில், ‘சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பணி சிறக்க எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!‘ என பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து, பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், அருமை அண்ணன் மருத்துவர், ராமதாஸ் அவர்களின் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், அருமை அண்ணன் மருத்துவர், @drramadoss அவர்களின் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 11, 2022