வருகின்ற ஜனவரி 22-ஆம் தேதி உத்தர பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. பிரமாண்டமாக நடைபெற இருக்கும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளில் ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறார்கள்.
கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22-ஆம் தேதி நண்பகல் 12.45 மணி அளவில் குழந்தை ராமர் சிலையும் வைக்கப்படவுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெறும் இந்த நாளில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்து இருந்தார்.
சபரிமலையில் முன்பதிவை நிறுத்த தேவசம் போர்டு முடிவு..!
மேலும், இந்த கும்பாபிஷே விழா பிரமாண்டமாக நடைபெற இருக்கவேண்டும் என்பதால், இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடியின் அறிவுரைப்படி,பல அரசியல் தலைவர்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் என பலருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ். தென் பாரத அமைப்பாளர் செந்தில்குமார், பாஜகவின் அர்ஜுனமூர்த்தி உள்ளிட்டோர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்கள்.
அவரை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு வைக்கப்பட்டுள்ளது. இன்று எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழைவிழா குழு நிர்வாகிகளான பிரகாஷ், ராம்குமார் ஆகியோர் சேர்ந்து வழங்கினார்கள்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஃபெங்கால் புயலாக…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு…
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் எந்த அளவுக்கு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்…
புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று…
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…