அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!

ayodhya ram temple

வருகின்ற ஜனவரி 22-ஆம் தேதி உத்தர பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. பிரமாண்டமாக நடைபெற இருக்கும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளில் ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறார்கள்.

கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22-ஆம் தேதி நண்பகல் 12.45 மணி அளவில் குழந்தை ராமர் சிலையும் வைக்கப்படவுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெறும் இந்த நாளில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்து இருந்தார்.

சபரிமலையில் முன்பதிவை நிறுத்த தேவசம் போர்டு முடிவு..!

மேலும், இந்த கும்பாபிஷே விழா பிரமாண்டமாக நடைபெற இருக்கவேண்டும் என்பதால், இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடியின் அறிவுரைப்படி,பல அரசியல் தலைவர்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் என பலருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ். தென் பாரத அமைப்பாளர் செந்தில்குமார், பாஜகவின் அர்ஜுனமூர்த்தி உள்ளிட்டோர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்கள்.

அவரை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு வைக்கப்பட்டுள்ளது.  இன்று எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து  அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழைவிழா குழு நிர்வாகிகளான பிரகாஷ், ராம்குமார் ஆகியோர் சேர்ந்து வழங்கினார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்