Edappadi Palaniswami: இன்று உலகின் மிகப்பெரிய மக்களாட்சி திருவிழா என்று வாக்களித்த பின் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. அதன்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தங்களது வாக்குசாவடிகளுக்கு சென்று ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.
அந்தவகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
இதன்பின் தனது எக்ஸ் வலைதளத்தில் இபிஎஸ் பதிவிட்டிருந்தார். அதில், உலகின் மிகப்பெரிய மக்களாட்சித் திருவிழாவாம் இந்திய மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் இன்று. மக்களாட்சியின் அடித்தளமாம் நம் வாக்குரிமையை நிலைநாட்டும் மகத்தான நாள் இன்று.
நமக்கான உரிமைகளை கேட்டுப் பெற வல்லவர்களை, மக்களாட்சியின் விழுமியங்களைக் காத்திடும் நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் முக்கியமான நாள் இன்று. ஆதலால், அனைவரும் தவறாது தங்களது வாக்குச்சாவடிகளுக்கு சென்று, தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…