உலகின் மிகப்பெரிய மக்களாட்சி திருவிழா இன்று – இபிஎஸ்

Edappadi Palaniswami

Edappadi Palaniswami: இன்று உலகின் மிகப்பெரிய மக்களாட்சி திருவிழா என்று வாக்களித்த பின் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. அதன்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தங்களது வாக்குசாவடிகளுக்கு சென்று ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.

அந்தவகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது  ஜனநாயக கடமையை ஆற்றினார்.

இதன்பின் தனது எக்ஸ் வலைதளத்தில் இபிஎஸ் பதிவிட்டிருந்தார். அதில், உலகின் மிகப்பெரிய மக்களாட்சித் திருவிழாவாம் இந்திய மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் இன்று. மக்களாட்சியின் அடித்தளமாம் நம் வாக்குரிமையை நிலைநாட்டும் மகத்தான நாள் இன்று.

நமக்கான உரிமைகளை கேட்டுப் பெற வல்லவர்களை, மக்களாட்சியின் விழுமியங்களைக் காத்திடும் நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் முக்கியமான நாள் இன்று. ஆதலால், அனைவரும் தவறாது தங்களது வாக்குச்சாவடிகளுக்கு சென்று, தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert
Minister Sekarbabu