ராமர் கோயில் திறப்பு விழாவில் வாய்ப்பிருந்தால் கலந்து கொள்வேன் – எடப்பாடி பழனிசாமி

Published by
பாலா கலியமூர்த்தி

அயோத்தியில் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் மற்றும் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவுக்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இதனால், அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உட்பட பலர் வருகை தர உள்ளனர்.

இந்த சூழலில், ராமர் கோயில் திறப்பு விழாவை இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். தேர்தல் நெருங்குவதால் பாஜகவும், ஆர்எஸ்எஸ்-யும் மதத்தை வைத்து அரசியல் செய்கிறது என குற்றச்சாட்டி, திறப்பு விழாவை புறக்கணித்து வருகின்றனர். இந்த நிலையில், வாய்ப்பிருந்தால் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வழக்கில் திடீர் ட்விஸ்ட்.. புதிய மனு தாக்கல்…அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு..!

சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். அதிமுக மதத்திற்கும், சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. இதனால் எந்த மதத்தினரோ, சாதியினரோ இருந்தாலும் விருப்பப்பட்டால் ராமர் கோயிலும் செல்லலாம். எனவே, ராமர் கோயில் திறப்பு விழாவில் வாய்ப்பிருந்தால் கலந்துகொள்வேன்.

எனக்கு கால் வலி இருப்பதால் சிரமம் இருக்கிறது. இதனால் கலந்துகொள்வது குறித்து பொறுத்திருந்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து இபிஎஸ் கூறியதாவது, மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதனால் அதிமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு சீட் வழங்கப்படும். மேலும், அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும், கூட்டணி அமைந்ததும் முறைப்படி அறிவிக்கப்படும் என்றார்.

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

3 hours ago
என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

4 hours ago
MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

5 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

6 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

7 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

8 hours ago