இங்குள்ள ஒவ்வொருவரும் எம்எல்ஏ தான், பொதுச்செயலாளர் தான்… இபிஎஸ் பேச்சு!

edappadi palaniswami

Edappadi Palaniswami: அதிமுகவின் வெற்றி கட்சி நிர்வாகிகள் அனைவரையும் சாரும் என்று  செயல் வீரர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகள் விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் அனல் பறக்கும் களமாக மாறியுள்ளது. இந்த சூழலில், சேலம் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

அப்போது சேலம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விக்னேஷ்க்கு ஆதரவு அளிக்கும்படி எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு முழுவதும் அதிமுகவின் அலை தான் வீசுகிறது. என்னுடைய இந்த நிலைக்கு எடப்பாடி தொகுதி மக்களாகிய நீங்கள் தான் காரணம், நான் உங்களுக்கு கடமை பட்டு உள்ளேன்.

பெண்களுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் வருவதற்கு காரணமாக இருந்தது அதிமுக. அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட மேட்டூர் அணை உபரி நீர் திட்டப்பணிகளை தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு முடக்கி வைத்துள்ளது என குற்றசாட்டை முன்வைத்த இபிஎஸ், எடப்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை.

இங்குள்ள ஒவ்வொருவரும் எம்எல்ஏ தான், கட்சி பொதுச்செயலாளர் தான். அதிமுகவின் வெற்றி கட்சி நிர்வாகிகள் அனைவரையும் சாரும் என்றும் சேலம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விக்னேஷை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu Live
Pooran
TATAIPL - DCvLSG
KL Rahul
Vijay - Ashwath Marimuthu
DC vs LSG
janaNayagan - Vijay