ADMK Chief Secretary Edappadi Palanisamy [File Image]
இன்று அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டும் இந்த நிகழ்வு , முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதலலே அரசியல் தலைவர்கள் நேரில் வந்து தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் வந்து நேரடியாக மரியாதை செலுத்திய பின்னர், அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியும் நேரில் வந்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன்: தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாக பார்த்தவர் முத்துராமலிங்கத் தேவர் – அண்ணாமலை பேட்டி!
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தனது வாழ்நாள் முழுவதும் தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக மதித்து செயல்பட்ட தேசிய தலைவர் முத்துராமலிங்க தேவர். ஒரே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என இரு தேர்தலிலும் வெற்றி பெரும் அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு படைத்தவர்.
தேவர் ஜெயந்தி விழாவை அரசு விழாவாக அறிவித்தவர் அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர். தேவர் புகைப்படத்தை சட்டமன்றத்தில் அதிமுக தான் திறந்து வைத்தது. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த சமயத்தில், 13.5 கிலோ தங்கம் கவசத்தை அளித்தார். நந்தனத்தில் முத்துராமலிங்க தேவர் முழு உருவ சிலையானது அதிமுக ஆட்சியில் நிறுவப்பட்டது.
அவர் தேசத்திற்காக வாழ்ந்த மாபெரும் தலைவர். அவருக்கு புகழ் சேர்க்கும் விதமாக மேற்குறிப்பிட்ட திட்டங்களை அதிமுக செயல்படுத்தியது. அவர் பிறந்த இந்த ஊர் தெய்வீக பூமி. பசும்பொன்னில் தேவர் நினைவாக நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. தெய்வீக திருமகனாரின் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தியுள்ளோம். இந்த பொன்னான நாளில் இங்கே அரசியல் பேசுவது பொருத்தமாக இருக்காது என கூறிவிட்டு சென்றார் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி.
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…