எடப்பாடி பழனிசாமி போலி விவசாயியாக நாடகமாடுகிறார் – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாத போலி விவசாயி எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு வெற்று அறிக்கையினை வெளியிடுகிறார்.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் டெல்டா மாவட்டங்களில் மழையினால் மூழ்கி சேதமடைந்த குறுவை பயிர்களுக்கான கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி பாதிப்படைந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டுமென தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் எல்லா துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாத போலி விவசாயி எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு வெற்று அறிக்கையினை வெளியிட்டு குழப்பத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் வெற்று விளம்பரத்தை அரங்கேற்றியுள்ளார்.
முதற்கட்டமாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 1 இலட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது என்பதே தவறானது. இத்துறையின் முதற்கட்ட கணக்கெடுப்பில் 17,775 ஏக்கர் நீரில் மூழ்கியுள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி போலி விவசாயியாக நாடகமாடுவதாகவும், உண்மைக்கு புறம்பான அறிக்கை விடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.