பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லவே இல்லை – எடப்பாடி பழனிசாமி..!

Edappadi Palaniswami

மக்களவை தேர்தல் தேதி சில நாட்களில் அறிவிக்க வாய்ப்புள்ளது. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கூட்டணி தொடர்பாகவும், தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஆலோசனை செய்துவருகிறது. ஆனால் அதிமுக இன்னும் கூட்டணியை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ” மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே அறிவித்து விட்டோம்.

பாஜகவுடன் கூட்டணி இருக்கிறதா என்று இனியும் கேள்வி கேட்க வேண்டாம். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை கடந்த செப்டம்பர் மாதமே அதிமுக அறிவித்துவிட்டது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என இறுதியாகவும், உறுதியாகவும் கூறுகிறோம். பாஜகவுடன் மறைமுகமாக நாங்கள் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று சிலர் கூறி வருகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இல்லை என்பதை தீர்மானமாக நிறைவேற்றி விட்டோம் என கூறினார்.

சைதை துரைசாமி ரத்த மாதிரி அனுப்பி வைப்பு..!

மேலும், அதிமுக கூட்டணி உரிய நேரத்தில் அமைக்கப்படும்.  திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி  உள்ளது. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கே தொகுதிகளை வழங்க திமுக மறுக்கிறது. திமுக கூட்டணியில் எந்த கட்சிகள் உள்ளன என்பது குறித்து இன்னும் பத்து நாட்களில் தெரியவரும்,  வாக்களிக்கும் மக்களை மட்டுமே அதிமுக நம்புகிறது என தெரிவித்தார்.

பாஜக கூட்டணி கதவுகள் திறந்தே இருப்பதாக அமித்ஷா கூறிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு கூறியுள்ளார்.
அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து நடந்து முடிந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. இந்தக் கூட்டணி வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் இணைந்து எதிர்கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக கடந்த ஆண்டு திடீரென வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்