கள்ளச்சாராய விவகாரம்: இன்று விழுப்புரம் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியத்தில் 39 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் விழுப்புரத்தில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தையும் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
தற்போது, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மரக்காணம் செல்கிறார். இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக சாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.