அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. இதற்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இருக்கும். ஒருவேளை கூட்டணியில் அமமுக இருக்க முடியாது என்ற சூழ்நிலை வந்தால் தேர்தலில் தனித்து நிற்கவும் தயார்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளுடன் கூட்டணியில் அமமுக இருக்கலாம். எங்கள் லட்சியம் நிறைவேறும் வரை நாங்கள் ஓய மாட்டோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பெரும் வீழ்ச்சியை சந்திக்கப் போகிறார். அதிமுக மீண்டும் ஓன்றிணைய வாய்ப்புகள் இல்லை. அதிமுக ஒன்றிணையும் என சசிகலா சொல்லி இருப்பதால் அவரிடம்தான் இதை கேட்க வேண்டும்.
எந்த காரணத்தை கொண்டும் பழனிசாமி்யுடன் அமமுக இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என்றார். மேலும், ஐனவரி மாதம் ஓ.பி்எஸ் சார்பில் நடைபெறும் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் பங்கேற்பது குறித்து யோசிப்போம். அமமுக, ஒபிஎஸ் இடையேயான நட்பு, அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் நன்றாக உள்ளது.
அதிமுக – பா.ஜ.க கூட்டணி முறிவு குறித்த கேள்விக்கு, இரு கட்சிகள் ஒன்றாக இருந்தனர், இப்போது பிரிந்து இருக்கின்றனர். அப்படித்தான் பார்க்க முடியும். தேர்தலுக்கான எங்களது நிலைப்பாட்டை உரிய நேரத்தில் தெரிவிப்போம். அம்மாவின் ஆட்சியை அமைக்கும் வரை ஓயமாட்டோம் எனவும் தெரிவித்தார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…