மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ரூ.6,000 நிவாரணத் தொகையை ரூ.15,000 உயர்த்தி வழங்க வேண்டும் என திர்க்கட்சி தலைவரும், அதிமுக, பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” மிக்ஜாம் புயல் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை எப்படி கையாள்வது என்ற படிப்பினையை பாடமாக எடுத்துக்கொண்டு, தென் மாவட்டங்களுக்கான கனமழை எச்சரிக்கையின்போது இந்த விடியா திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், இந்த விடியா திமுக அரசு இந்திய வானிலை ஆய்வு மையத்தை குறை கூறிக்கொண்டு பாதிக்கப்பட்ட நான்கு தென்மாவட்ட மக்களுக்கு உரிய நேரத்தில் தேவையான உதவிகளை செய்யாமல் தட்டிக் கழிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
உதயநிதி ஸ்டாலின் கேள்வியால் தான் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி செல்கிறார் – வைகோ!
கடந்த வாரம் பெய்த கனமழையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டபோது, விடியா திமுக அரசின் முதலமைச்சரோ மக்கள் மீது சிறிதும் அக்கறையின்றி, தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்காக டெல்லிக்குச் சென்றுவிட்டார்.
கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு தற்போது விடியா திமுக அரசு அறிவித்துள்ள 6,000 ரூபாய் நிவாரணத் தொகையை 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், மேலும் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை நிவாரணமாக, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், விடுபடாமல் வழங்க வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என கூறியுள்ளார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…