டிஐஜி தற்கொலை விவகாரம்.! மன அழுத்தம் உள்ள காவல் அதிகாரக்ளுக்கு ஓய்வு கொடுங்கள்.! இபிஎஸ் வலியுறுத்தல்.!
மன அழுத்தம் உள்ள காவல் அதிகாரக்ளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், இனியாவது மன அழுத்தம் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு ஓய்வு கொடுக்க வேண்டும். டிஐஜி விஜயகுமார் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், அமைச்சர் ரகுபதி மேலேயே ஊழல் குற்றசாட்டுகள் இருக்கின்றன. வரவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அமைச்சர் ரகுபதி சம்பந்தப்பட்ட சொத்துகுவிப்பு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அவர் ஊழல் பற்றி பேசுவதற்கு தகுதியில்லை. அவர் சட்டத்துறை அமைச்சாக இருக்கிறார். ஊழல் தடுப்பு பிரிவு அவரிடமே இருக்கிறது என அமைச்சர் ரகுபதி மீதான தன் விமர்சனத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்தார்.