மாடுபிடி வீரர்களுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்க வேண்டும்! எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

edappadi palanisamy about jallikattu

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் பல மாவட்டங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உழவர் தினத்தை முன்னிட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை முதல் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், உழவர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து திமுக அரசு தமிழகத்தின் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக கொடிக்கம்ப விவகாரம்.! ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பினர் இடையே மோதல்.!

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” எனும் கூற்றுக்கு ஏற்ப உலகை வழிநடத்தும் உழவுத் தொழில் செய்யும் உழவர் பெருமக்களுக்கும், அந்த உழவுக்கு துணை நிற்கும் மாடுகளுக்கும் இந்த உழவர் திருநாளில் எனது நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன்,

ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆன இந்த விடியா திமுக அரசு தமிழகத்தின் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested