அரசாணை என் 115ஐ திரும்ப பெறுக.! – எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை. !
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை 115ஐ நீக்க வேண்டும் என அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு சார்பில் அண்மையில், மனித வள மேலாண்மை துறை அரசாணை 115 எனும் விதியை கொண்டுவந்தது. இந்த விதிப்படி மனிதவள சீர்திருத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பரூக்கி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த குழுவானது, அரசு பணிகளில்,திறன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்ப ஆய்வு மேற்கொள்வது. டி மற்றும் சி பிரிவு பணிகளுக்கு வெளிமுகமை மூலம் பணியாட்களை நியமிக்க சாத்திய கூறுகளை ஆராய்வது, வெளிமுகமை ஆள்சேர்ப்பு நிறுவனங்களை ஆராய்ந்து அதன் மூலம் அரசு பணியிடங்களை நிரப்புவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்வது என பல்வேறு ஆய்வுகளை மேற்கண்ட குழு மேற்கொள்ள உள்ளது.
தமிழக அரசு மேற்கொள்ள உள்ள இந்த ஆய்வு குறித்து எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை மூலம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
அதில், அரசு வேலைக்காக காத்திருக்கும் தமிழக இளைஞர்களின் கனவை தகர்க்கும் வகையில் இந்த ஆய்வு உள்ளது. தமிழக அரசு இந்த 115 விதியை நீக்க வேண்டும் என தனது எதிர்ப்பை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
படித்த இளைஞர்களின் அரசு வேலை வாய்ப்பு கனவை சீர்குலைக்கும் அரசாணை என் 115-ஐ திரும்ப பெறுக.
– மாண்புமிகு கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை. pic.twitter.com/vyX2FXl3qX
— AIADMK (@AIADMKOfficial) November 8, 2022