மக்களுக்கு மளிகை பொருட்கள், போர்வை வழங்கிய முன்னாள் முதல்வர் இபிஎஸ்.!

Default Image

ஆலந்தூர் தொகுதியில் கொளப்பாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி நிவாரண பொருட்களை வழங்கினார். 

இன்று காலை முதல் முன்னாள் முதல்வரும் , எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் முழுதாக மழைநீர் விடிந்துவிட்டது என திமுக பொய் கூறுகிறது என குற்றம் சாட்டினார். மேலும் புறநகர் பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதனை அடுத்து, ஆலந்தூர் தொகுதியில் கொளப்பாக்கம் பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, மழையால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு, மளிகை பொருட்கள், போர்வை ஆகிய பொருட்களை வழங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்