ஓபிஎஸ் பக்கத்தில் அமர்வதை எடப்பாடி பழனிசாமியால் தாங்கி கொள்ள முடியவில்லை – அமைச்சர் மா. சுப்பிரமணியன்
நேற்று எடப்பாடி பழனிசாமி கலவர நாடகத்தை நடத்தி,வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வுகள் நிமிட வாரியாக எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும் என அருணா ஜெகதீசன் ஆணையம் கூறியுள்ளது.
உளவுத்துறை தகவல் தெரிவித்தும் சட்ட ஒழுங்கு நிலை கவனிக்கப்படாமல் இருந்தது; தீவிரமாக கவனித்திருந்தால் ஆரம்பத்திலேயே சமாளித்திருக்கலாம் என அறிக்கை. எடப்பாடி பழனிசாமி அசட்டையாக இருந்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது; நேற்று எடப்பாடி பழனிசாமி கலவர நாடகத்தை நடத்தி,வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் நடவடிக்கைகள் மேற்கொள்வார். யாராக இருந்தாலும் குற்றச்சாட்டுடையவர்கள் மீது நடவடிக்கை; ஆணையங்களின் அறிக்கை 100% மக்களிடம் சென்றடைந்துவிட்டது.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பு என்பது பேரவையின் விதிகளில் இல்லாத ஒன்று. பேரவை விதிகள் 2 ஓ படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமே விதியில் உள்ளது. தன் அருகே ஓ.பன்னீர் செல்வம் அமர்வதை எடப்பாடி பழனிசாமியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.