Udhayanidhi Stalin : சசிகலா காலில் சில்லறை தேடிய எடப்பாடி பழனிச்சாமி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்.
வடசென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வடசென்னை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அப்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை மக்கள் கடந்த தேர்தலில் ஒரு மனதாக தேர்ந்தெடுத்து, அதிகப்படியான வாக்குகளையும், அன்பையும் பெற்று முதல்வரானார். யார் காலில் விழுந்தும் முதல்வர் பதவிக்கு வரவில்லை.
நான் யாரை கூறுகிறேன் என தெரிகிறதா.? என கூறிவிட்டு , முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவின் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்து, இது யார்னு தெரிகிறதா என அங்குள்ள மக்களிடம் கேட்கிறார் அமைச்சர் உதயநிதி. பின்னர், அவர் என்ன செய்கிறார் என கேட்டு, சசிகலா காலில் எடப்படி பழனிச்சாமி சில்லறை தேடுகிறார் என விமர்சனம் செய்தார் உதயநிதி.
ஆமாம், நான் காலில் விழுந்து தான் முதலமைச்சர் ஆனேன் என கூறுகிறார். இம்மாதிரியான ஓர் முன்னாள் முதலமைச்சர் இந்தியாவிலேயே கிடையாது என கூறிய உதயநிதி, அடுத்து பிரதமர் மோடி குறித்து பேசினார். அதில், கொரோனா காலத்தில் மக்கள் கஷ்டப்படும்போது, தமிழகம் வராத பிரதமர், அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருங்கள் என கூறி, பாத்திரங்கள் கொண்டு ஒலி எழுப்பி அதன் மூலம் கொரோனாவை விரட்ட சொன்னார் பிரதமர் என விமர்சனம் செய்தார் உதயநிதி ஸ்டாலின்.
மேலும் அவர் பேசுகையில், அந்த கொரோனா காலத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டு இங்கிருந்து கோவை சென்று அங்குள்ள மருத்துவ கட்டமைப்புகளை பார்வதியிட சென்றார் நமது முதல்வர் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வடசென்னை பிரச்சாரத்தில் குறிப்பிட்டு பேசினார்.
சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…
டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…
சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், வரும் 20-ம்தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி…
இஸ்ரேல்: ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.…