எடப்பாடி பழனிசாமி மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி..!
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன், எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியின் மனைவி ராதா அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த பரிசோதனையில், அறிகுறிகளற்ற கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.