9 மீனவர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம்..!

Default Image

நாகை மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்கள் கேரள மாநிலம் கொச்சியில் தங்கி மீன்பிடித்து வந்தனர். அரபிக் கடலில் உருவான டவ்-தே புயல் எச்சரிக்கை தொடர்ந்து, அவர்கள் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த போது, புயலில் சிக்கியதாகவும், மீனவர்கள் வந்த விசைப்படகு கடலில் மூழ்கியதாகவும் தகவல் வெளியானது.

பின்னர், மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தரக்கோரி மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், கொச்சியில் இருந்து அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற நாகை சேர்ந்த 9 மீனவர்கள் கரை திரும்பவில்லை. 9 மீனவர்களையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘டவ்-தே’ புயலில் சிக்கி மீனவர்கள் மாயமானதால், 9 பேரின் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர். கடற்படை, விமானப்படை மூலம் மீனவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்து மீட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்