நாளை முதல் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறுகிறது.
கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் 22ம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைகிறது. செப்டம்பர் 23-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ள நிலையில், செப்டம்பர் 25-ஆம் தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிரமான தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் நாளை முதல் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட உள்ளார். தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களுக்கும் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ள எடப்பாடி பழனிசாமி, அப்பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…
சென்னை : நேற்று மியான்மர், தாய்லாந்து, பாங்காங்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து பாதிப்புள்ளாகியுள்ளன. இதில் மியான்மர்…
சென்னை : நேற்று ஐபிஎல் 2025 போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ்…
நாய்பிடாவ் : மியான்மரில் நேற்று 7.7 ரிக்டர் அளவு மற்றும் 6.4 ரிக்டர் என்ற அளவு இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து…
சென்னை : ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தனி ஆளாக மிக பெரிய அதிரடி ஆட்டம் ஆடும் பேட்ஸ்மேன்கள்…