அதிமுக என்ற கட்சி நல்ல இருக்க வேண்டும் என்று நினைத்தால் உடனடியாக எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.
அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் ஜே.எம்.பஷீர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இஸ்லாமியர்களுக்கு மாபெரும் துரோகம் இழைத்த எடப்பாடி என்று தெரிவித்து, இதன்தொடர்பான ஆதாரத்தை வெளியிட உள்ளேன். தொடர்ந்து இஸ்லாமிய துரோகி எடப்பாடி பழனிசாமியை கழகத்தை விட்டு நீக்க சொல்லி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுக்கு கோரிக்கை வைத்து ஊடகங்களுக்கு பேட்டியளிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி, செய்தியாளர்களிடம் பேசிய தென் சென்னை வடக்கு மாவட்ட அதிமுக சிறுபான்மையினர் பிரிவு துணை செயலாளர் ஜே.எம்.பஷீர், எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்க வேண்டும். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழித்து கொண்டியிருப்பதாகவும், அதிமுகவை அழிக்கவந்த பச்சை துரோகி என்றும் குற்றசாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதிவில் தொடரவேண்டும் என்பதற்காகவே குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக ஆதரித்தது. சசிகலா பற்றி ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்தில் எந்த தவறும் இல்லை. அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் நிலவி வருகிறது.
ஓபிஎஸ் கருத்து தெரிவித்த 4 நாட்கள் ஆகியும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மவுனமாக இருந்து வருகிறார். அதிமுக என்ற கட்சி நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றாலும், உடனடியாக அதிகாரத்தை பயன்படுத்தி எடப்பாடியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதனிடையே, கழக கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் ஜே.எம்.பஷீர் கட்சியில் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் – இபிஎஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தனர். எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த சில நிமிடங்களில் ஜே.எம்.பஷீர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…