நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாகவும், திமுக ஆலோசனைப்படியும் சபாநாயகர் செயல்படுகிறார்.! இபிஎஸ் குற்றசாட்டு.!
எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பையும் நாங்கள் குறிப்பிட்டோம். ஆனால் தீர்ப்புக்கு மாறாக சபாநாயகர் செயல்படுகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை படி சபாநாயகர் செயல்படுகிறார். – என தங்கள் தரப்பு கருத்துக்களை எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்தார்.
தமிழக சட்டப்பேரவை தொடங்கி இரண்டாவது நாளான இன்று இபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன்கலந்து கொண்டார். அப்போது எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் கடுமையான சட்டசபையில் அமளி ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டபேரவை நிகழ்வுகள் குறித்து பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.
இபிஎஸ் பேசுகையில் , ‘ எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க ஏற்கனவே சபாநாயகரிடம் கோரிக்கை வைத்து இருந்தோம். அடுத்து 2 முறை சபாநாயகரிடம் நினைவூட்டு கடிதம் கொடுத்துள்ளோம். இன்று காலை மூத்த அதிமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம்.’ என்று கூறினார் .
இதனை அடுத்து , ‘ அப்படி இருந்தும் நாங்கள் கொடுத்த அறிக்கையை கேட்காமல், நடுநிலையோடு செயல்பட வேண்டிய சபாநாயகர் அப்படி செயல்படவில்லை. அதிகமாக சட்டசபை உறுப்பினர்கள், ஒன்றுகூடி யாரை எதிர்க்கட்சி தலைவராக , எதிர்க்கட்சி துணை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ, அவர்கள் தான் எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது மரப. அது மறுக்கப்பட்டு இருகிறது. இதனை குறித்து தான் நீதி கேட்டோம். ‘ என தங்கள் தரப்பு கருத்தை கூறினார் இபிஎஸ்.
மேலும் குறிப்பிடுகையில், ‘ கேள்வி நேரம் முடிந்த பிறகு நீங்கள் செல்லலாம் என சபாநாயகர் கூறுகிறார். நீதிமன்ற தீர்ப்பையும் நாங்கள் குறிப்பிட்டோம். ஆனால் தீர்ப்புக்கு மாறாக சபாநாயகர் செயல்படுகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை படி சபாநாயகர் செயல்படுகிறார். நாங்கள் கையொப்பமிட்டு அனைத்தையும் கொடுத்து இருக்கிறம். ‘ என சபாநாயகர் மீது குற்றம் சாட்டினார் இபிஎஸ்.