தமிழத்தில் உள்ள குடும்ப அட்டைதார்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது.சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் கொரோனா வைரஸ் நிவாரணஅறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் .அவரது அறிவிப்பில்,அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு ,சமையல் எண்ணெய், சர்க்கரை விலை இன்றி வழங்கப்படும்.கொரோனா நிவாரணமாக ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என்றும் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.3250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்கும் .இருக்கும் இடத்தை விட்டு நகர முடியாதவர்களுக்காக, இருக்கும் இடத்திற்கே சென்று சூடான சுவையான உணவு வழங்கப்படும்.நடைபாதை கடைகாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்றும் கட்டிட தொழிலாளர்கள்,ஆட்டோ தொழிலாளர்களுக்கும் ரூ 1000 வழங்கப்படும்.ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும்.பிற மாநில தொழிலாளர்கள் அனைவருக்கும் 15,கிலோ அரிசி. ஒரு கிலோ பருப்பு, எண்ணெய் வழங்கப்படும்.மார்ச் மாத ரேஷன் பொருட்களை வாங்காதவர்கள் ஏப்ரல் மாதம் வாங்கிக் கொள்ளளலாம்என்றும் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் வருகின்ற 31-ம் தேதி முதல் 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…