போதைப் பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது..! ஆளுநரை சந்தித்த பின் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
Edappadi Palanisami: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசியுள்ளார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பானது நடைபெற்றது. இதன்போது கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக தலைவர்களும் உடன் இருந்தனர்.
Read More – மக்களவை தேர்தல்..! விறுவிறுப்பாக நடைபெற்ற திமுக மற்றும் அதிமுக வேட்பாளர் நேர்காணல்
சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு என்றும் சமீபத்தில் பறிமுதலான போதைப்பொருள்களின் விவரங்கள் குறித்த பட்டியலை ஆளுநரிடம் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநரிடம் தெரிவித்தோம்.
Read More – மக்களவை தேர்தல்..! டாஸ்மாக்கில் மொத்தமாக மதுபானங்களை விற்கக்கூடாது என அதிரடி உத்தரவு
போதைப்பொருள் புழக்கத்திற்கு திமுக தார்மீக பொறுப்பேற்க வேண்டும், காவல்துறையின் செயல்பாடு சந்தேகமாக உள்ளது, போதைப் பொருள் தொடர்பான விளக்கமான அறிக்கையை ஆளுநரிடம் அளித்துள்ளோம்.
Read More – மக்களவை தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்..! திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து
போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரிடம் வலியுறுத்தினோம், போதைப் பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது, இதே நிலை தொடர்ந்தால் தமிழகம் சீரழிந்துவிடும்” என கூறினார்.