தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி உளறிக் கொண்டிருக்கிறார் – மு.க.ஸ்டாலின்
தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி உளறிக் கொண்டிருக்கிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
போடிநாயகனுரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி உளறி கொண்டிருக்கிறார். உள் ஒதுக்கீடு சட்டம் தற்காலிகமானது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என கூறுகிறார். முதல்வருடன் தொலைபேசியில் பேசிய போது உள் ஒதுக்கீடு நிரந்தரமானது தான் என ராமதாஸ் தெரிவித்துள்ளார் என முக ஸ்டாலின் பரப்புரையில் விமர்சித்து பேசியுள்ளார்.
இதனிடையே, நேற்று பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளித்திருப்பது இடைக்கால ஏற்பாடு, இறுதியானது அல்ல, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு நிரந்தரமான உள் ஒதுக்கீடு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டம் நிரந்தரமானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். சமூகநீதி குறித்து புரிதல் இன்றி சிலர் பேசி வருவதாக விமர்சித்துள்ளார். முதல்வர் பழனிச்சாமிடம் சற்று முன் நான் தொலைபேசியில் பேசிய போதும் கூட, வன்னியர் இடஒதிக்கீடுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தமானது தான் என கூறியுள்ளார் என குறிப்பிட்டிருந்தார்.