சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில், உண்மையை மூடிமறைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சித்துள்ளார் – கே.எஸ்.அழகிரி

சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில், உண்மையை மூடிமறைக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முயற்சித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 2015 ஆம் ஆண்டில் சென்னையில் கனமழை பெய்த போது, செம்பரம்பாக்கம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதா ? அல்லது உபரிநீர் வெளியேற்றப்பட்டதா ? என்பது குறித்து சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில், உண்மையை மூடிமறைக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முயற்சித்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நவம்பர் 17இல் 18000 கனஅடி நீரும், டிசம்பர் 2இல் 29000 கனஅடி நீரும் இரவு நேரத்தில் திறந்துவிடப்பட்டதால் 600கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உடைமைகளை இழப்பதற்கு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு காரணமாக இருந்தது.
முதலமைச்சரோடு தொடர்பு கொள்ள முடியாமல் திண்டாடிய காரணத்தினால் தான் திறக்க வேண்டிய நேரத்தில் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளைத் திறக்காமல் , ஒரே நேரத்தில் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்றைய அ.தி.மு.க. அரசின் பொறுப்பற்ற மெத்தனப் போக்கு காரணமாகத் தான் சென்னை மாநகரில் அத்தகைய மனித பேரவலம் நிகழ்ந்ததை மறுக்க முடியுமா ?
2015 ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கை ஒரு படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் மேற்கொள்வார் என்று உறுதியாக நம்புகிறோம்.’ என தெரிவித்துள்ளார்.
(2) செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நவம்பர் 17இல் 18000 கனஅடி நீரும், டிசம்பர் 2இல் 29000 கனஅடி நீரும் இரவு நேரத்தில் திறந்துவிடப்பட்டதால் 600கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உடைமைகளை இழப்பதற்கு ஜெயலலிதா தலைமையிலான @AIADMKOfficial அரசு காரணமாக இருந்தது
— K.S.ALAGIRI (@KS_Alagiri) August 24, 2021
(4) 2015 ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கை ஒரு படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் மேற்கொள்வார் என்று உறுதியாக நம்புகிறோம்.
— K.S.ALAGIRI (@KS_Alagiri) August 24, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024