எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் …! தம்பிதுரைக்கு விருப்பம் இல்லை…!தம்பிதுரைக்கு தான் முதலமைச்சராக வேண்டும் என ஆசை ….!பகீர் தகவலை வெளியிட்ட டி.டி.வி.தினகரன்
மக்களவைத் துணைத் சபாநாயகர் தம்பிதுரைக்கு முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.
பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.
இதன் பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.
பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .
இதனால் தினகரன் தனக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.
இந்நிலையில் தினகரன் தற்போது ஆர்.கே.நகர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார்.அதேபோல் அண்ணா திராவிடர் கழக என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன்கட்சி ஒன்றைஆரம்பித்தார்.இதற்கு திவாகரன் பொதுச்செயலார் ஆவார்.
சமீபத்தில் திமுக -பாஜக கூட்டணியா இல்லை பாஜக -அதிமுக கூட்டணியா என்ற குளப்பம் நிலவி வருகின்றது.
இந்நிலையில் சில நாட்களாக மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை பாஜக மற்றும் திமுக மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார்.
தற்போது அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில்,மக்களவைத் துணைத் சபாநாயகர் தம்பிதுரைக்கு முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருப்பதில் மக்களவைத் துணைத் சபாநாயகர் தம்பிதுரைக்கு விருப்பம் இல்லை என்றும், அதனாலேயே பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதாகவும் தினகரன் கூறியுள்ளார்.