நீலகிரி மாவட்ட நிவாரண பணிகளுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு-முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Default Image

நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணத்திற்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தென்மேற்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில்  கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்து  வருகிறது.தமிழகத்தை பொறுத்தவரை கோவை,நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது.கனமழையால்  பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதால் அவற்றை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.பல்லாயிரக்கணக்கான  மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்ய முதல்வர் பழனிசாமி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அதாவது  நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணத்திற்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார் .மேலும் சேத விவரங்களை சேகரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.பகுதியாக சேதமடைந்த 1,225 குடிசை வீடுகளுக்கு தலா ரூ.4,100,  முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்