Bahujan Samajwadi Party State Leader Armstrong - ADMK Chief Secretary Edappadi Palanisamy [File Image]
சேலம்: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது என இபிஎஸ் குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
கடந்த ஜூலை 5ஆம் தேதி இரவு சென்னை பெரம்பூர் அருகே, பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் படுகொலை செய்யபட்டார். இந்த கொலை சம்பவத்தில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் காவல்துறை விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சட்டம் ஒழுங்கு பற்றி பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இன்று தமிழக அரசு சென்னை மாநகர ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. புதிய ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சந்தீப் ராய் தற்போது காவல்துறை பயிற்சித்துறைக்கு டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வுகள் குறித்து இன்று சேலம், ஓமலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது விமர்சனங்களை முன்வைத்தார். அவர் கூறுகையில், திமுக அரசின் கீழ் பெண்கள், குழந்தைகள், அரசியல் பொறுப்பாளர்கள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தினமும் கொலை நடக்கும் சூழல் நிலவுகிறது. அதிகாரிகளை இடம் மாற்றம் செய்தால் சட்டம் ஒழுங்கு சீராகி விடாது. திமுக அரசின் கீழ் காவல்துறைக்கு முழு சுதந்திரம் கிடையாது. சட்டம் ஒழுங்கு என்பது அடியோடு சீரழிந்துவிட்டது. பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டமிட்டு நடந்துள்ளதாக குடும்பத்தினர்கள் கூறி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையிடம் சரணடைந்தவர்கள் போலி குற்றவாளிகளே. அவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்றும் பல்வேறு குற்றசாட்டுகளை எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்தார்.
ஓமலூர் சேலம்
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…