தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் மின்கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. செங்கல்பட்டு ஆர்ப்பாட்டத்திற்கு இபிஎஸ் தலைமை தாங்கிவருகிறார்.
மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதில் செங்கல்பட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்ட கூட்ட்டத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்குகிறார்.
தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்திற்கு ஒரு நன்மையையும் ஏற்படவில்லை. தமிழகத்தில் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. 15 மாத காலமாக கமிஷன், கலெக்சன், கரப்ஷன் அதுதான் சரியாக நடந்து வருகிறது.
எல்லா துறையிலும் ஊழல் தான் நடந்து வருகிறது. இதுவரை தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மை செய்ய இவர்கள் கவனம் செலுத்தவில்லை. திமுக ஆட்சி அமைந்த உடன் சொத்து வரி உயர்ந்தது. அதுவும் 100 சதவீதம் உயர்ந்தது.’ என பல்வேறு குற்றசாட்டுகளை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்த ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…