முதல்வர் வீட்டில் வெடிகுண்டு-மர்மநபர் கைது
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கடந்த 19ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் சிக்கந்தர் பாஷா என்பவரை போலீஸ் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் குடிபோதையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசார் விசாரணையில் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.