கடலூர், மயிலாடுதுறை பகுதிகளில் இபிஎஸ் ஆய்வு.! நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டம்.!
கடலூர், மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி ஆகிய பகுதிகளை நாளை நேரில் ஆய்வு செய்ய வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது வரை இந்த மழை பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பெய்து வருகிறது. இன்னும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதில் ஏற்கனவே, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மளிகை பொருட்கள், போர்வை உள்ளிட்டவற்றை வழங்கினார்.
தற்போது நாளை, மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி, கடலூர், சிதம்பரம் ஆகிய ஊர்களுக்கு மழைநீரால் பாதிக்கப்பட்டபகுதிகளை ஆய்வு செய்ய எடப்பாடி பழனிச்சாமி வரவுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பின்னர், மக்களுக்கு நிவாரண பொருட்களையும் இபிஎஸ் வழங்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.