Election2024 : திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய் ஊழல். – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்று கரூரில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி கடுமையாக விமர்சித்தார்.
அவர் நேற்று பிரச்சாரத்தில் பேசுகையில், இந்த மாவட்டத்துல ஒருத்தர் இருந்தார், பேரு செந்தில் பாலாஜி. அவர் என்ன செய்தார்னா, அரசு மதுபான கடைகளில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபா அதிகமாக வாங்கினார். அதனால் அவர் பெயர் 10 ரூபா பாலாஜி என்றாகிவிட்டது. தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 1 கோடி மதுபாட்டில் விற்கும்.
அப்படி பார்த்தால், ஒருநாளைக்கு 10 கோடி ரூபாய் கமிஷன். ஒரு மாதத்திற்கு 300 கோடி ரூபாய். வருடத்திற்கு 3,600 கோடி ரூபாய் கமிஷன். அதனை எங்கு கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுத்து விடுவார். அவரை தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘செயல்வீரர்’ என கூறுகிறார். தன்னை விவசாயி என்றும் முதல்வர் தன்னை கூறிக்கொள்கிறார்.
அவர் விவசாயி என்றால் என்னோடு நேரடியாக விவசாயம் பற்றி பேச சொல்லுங்கள். யார் உண்மையான விவசாயி என்று தெரிந்துகொள்வோம் எனவும் எடப்பாடி பழனிச்சாமி கரூர் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…