தமிழக மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்திற்கு பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில், தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்ட குடிமராமத்து திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் 23 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 38 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும்,
மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக ஒரு அரசு பல் மருத்துவக்கல்லூரி விரைவில் தொடங்கப்படும் என்றும், கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் கூறிய அவர், கல்லணைக் கால்வாய் சீரமைப்புக்காக சுமார் ரூ.2,600 கோடியில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் அனுமதி பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அந்த பேட்டியில் அவர் தெரிவித்த்டுள்ளார்.
நாக்பூர் : 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நெருங்கி வரும் நிலையில், இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள்…
சென்னை : தமிழகமே பெரிதும் எதிர்பார்த்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.…
கர்நாடகா : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கார் மீது ஆட்டோ மோதிய சம்பவம் பரபரப்பை…
டெல்லி : டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும், இன்று ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), மில்கிபூர் (உ.பி.) தொகுதிகளிலும்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்…
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…