எடப்பாடி பழனிச்சாமி , ஓ.பி.எஸ் மற்றும் சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திண்டுக்கல்லை சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றம் தொடர்ந்த வழக்கில், அதிமுக கட்சி விதிப்படி பொதுச்செயலாளர் கட்சியின் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படவேண்டும் எனவும் இந்த விதியை திருத்தமுடியாது என மனுதாரர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுச்செயலாளர் பதவியை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை எனவும் பொதுச்செயலாளரை நீக்கியது கட்சிக்கு முரணானது எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவை பொதுக்குழு, செயற்குழு நியமித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாகவும், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பிறகு தற்போதைய ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி இணைந்து பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டி பொதுச்செயலாளர் பதிவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியில் நடைமுறையில் உள்ள இரட்டை தலைமையையும் உறுப்பினர்கள் விரும்பவில்லை எனவும் கடந்த 2014 அக்டோபரில் நடத்தப்பட்ட உட்கட்சிதேர்தலில் தெரிந்தெடுக்கப்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால் உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் விரைவில் தேர்தலை நடத்துவதாகவும் உறுதி அளித்துவிட்டு ஓராண்டிற்கு மேல் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை என அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, இந்த மனுவிற்கு ஜூலை 7-ஆம் தேதிக்குள் பதிலளிக்க அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி மற்றும் சசிகலாவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூலை 7-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…