பாஜகவுக்கு சாவுமணி அடிக்கப்போகும் எடப்பாடி! அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டனக் குரல்!
பாஜகவுக்கு சாவுமணி அடிக்கப்போகும் எடப்பாடி என்று அதிமுக தொண்டர்கள் முழக்கமிட்டு வருவதாக தகவல்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு அதிமுகவினர் கடும் கண்டங்களை தெரிவித்து விமர்சித்து வருகின்றனர். அண்ணாமலையின் கருத்தால், அதிமுக – பாஜக இடையே பெரிய விரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அண்ணாமலைக்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது, அதிமுக குறித்து அண்ணாமலையின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் முழக்கமிட்டு வருகின்றனர். அண்ணாமலைக்கு எதிராகவும், இபிஎஸ்-க்கு ஆதரவாகவும் அதிமுகவினர் முழக்கம் எழுப்புவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதுவும், பாஜகவுக்கு சாவுமணி அடிக்கப்போகும் எடப்பாடி என்று அதிமுக தொண்டர்கள் முழக்கமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
எனவே, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு கண்டனக் குரல் எழுந்துள்ளது. அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க பாஜக தலைமைக்கு வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ஜெயலலிதா பற்றி மீண்டும் பேசினால் அண்ணாமலை வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம் என்றும் அண்ணாமலை கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் என அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், பாஜகவுடன் கூட்டணியை தொடரக்கூடாது எனவும் தொண்டர்கள் வாலியுத்தியுள்ளனர். மேலும், விருப்பம் இல்லையெனில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறலாம் என்று சிவி சண்முகம் எச்சரிக்கை விடுத்திருந்தார். எனவே, பாஜகவுடன் கூட்டணி தொடருமா என்பது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.