அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி துரோகிதான்…அமைச்சர் ரகுபதி பதிலடி!

எடப்பாடி பழனிச்சாமியின் வார்த்தையை நம்பி ஏமாற்றம் அடைந்த அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனுமே தியாகிகள்தான் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

s ragupathy edappadi palanisamy

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’ எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. சட்டப்பேரவையில் யார் எந்த தியாகி என்ற கேள்விக்கு காட்டத்துடன் பதில் அளித்து பேசியிருந்த மு.க.ஸ்டாலின் ” அதிமுகவிலிருந்து தாங்கள் சிக்கியிருந்த வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ள டெல்லி போய் யார் காலில் விழுந்தார்கள் என்று தெரியும்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சராக அன்றைக்கு உதவிய அம்மையாரை ஏமாற்றியவர்தான் தியாகியாக இருக்கிறார் ” என பேசியிருந்தார். அவரை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் முதல்வர் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியீட்டு இருந்தார். அதில், யார் அந்த தியாகி என்ற கேள்விக்கு பதில் சொல்லத் திராணியில்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , சம்மந்தமே இல்லாத ஒரு பதிலை அளித்துள்ளார் என கூறியிருந்தார்.

இதனையடுத்து எடப்பாடி பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு பதிலடி கொடுத்துள்ளார். அதில் ” ’தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி யார்?’ எனக் கேட்டால் அரசியல் தெரியாத சிறுவன் கூட பழனிசாமியை கை காட்டுவான். ’பாஜகவின் அடிமையாக வாழ்வதையே அரசியல்’ என வாழும் பாதந்தாங்கி பழனிசாமி அவமானப்படுவது உறுதி.

யார் அந்தத் தியாகி? என்ற அதிமுகவின் முனை மழுங்கிய கேள்விக்கு ‘’நொந்து போய் நூடுல்ஸ் ஆன அதிமுக தொண்டர்கள்தான் அந்த தியாகிகள் என முதல்வர் சொல்லிருக்கிறார். அரசியல் அறத்தை அடகு வைத்து விட்டு, துரோகங்களை மட்டுமே செய்து முன்னேறியவர் பழனிசாமி. மூச்சுக்கு 300 முறை அம்மா மந்திரம் படிப்பார்; அம்மையார் ஜெயலலிதா அருகில் கூனி குறுகி நிற்பார்; அம்மையார் ஜெயலலிதாவின் கார் டயரை தொட்டு வணங்குவார்; ஆனால், அந்த அம்மாவுக்கு விழுந்த வாக்குகளால்தான்தான் முதலமைச்சராக வந்து அமர்ந்திருக்கிறோம் என்பதை மறந்து, அம்மையார் ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர் பழனிசாமி. ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிரான பாஜகவின் பாதம்தாங்கியாக மாறினார் பழனிசாமி.

கடந்த 2 ஆண்டுகளாக ’’பாஜகவுடன் கூட்டணி கிடையாது’’ என்று சத்தியம் செய்து வந்த பழனிசாமி, இன்று டெல்லி மேலிடத்தின் மிரட்டலுக்குப் பயந்து, சிறைக்கு அஞ்சி, தாங்கள் அடித்த கொள்ளை பணத்தைப் பாதுகாக்க மீண்டும் பாஜக கூட்டணிக்குத் தயாராகி விட்டார். அவரும் அவருடைய அடிவருடிகளும் பாஜகவின் பிரமுகர்களை முறை போட்டுப் போய் பார்த்துவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் வார்த்தையை நம்பி ஏமாற்றம் அடைந்த அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனுமே தியாகிகள்தான்! அவர்களுக்கும் எடப்பாடி துரோகிதான்!

தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் துரோகம், இந்தியைத் திணித்து துரோகம், தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து துரோகம் என பாஜக வரிசையாக துரோகங்களைச் செய்து சதித்திட்டம் தீட்டி வருகிறது. கொஞ்சம் கூட வெட்கமின்றி, தமிழ்நாட்டு மக்களைப் பற்றி துளியும் யோசிக்காமல் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடி தமிழ்நாட்டுக்கே துரோகி” எனவும் காட்டத்துடன் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்