கோடநாடு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் சனாதன சர்ச்சை விவகாரம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்திருந்தார். சனாதனம் என்றால் என்ன என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒழிந்திருக்க முடியாது.
ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து, கோடநாடு கொள்ளை, கொலை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய அமைச்சர் உதயநிதி ரூ.1.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை பேச தடை விதிக்க கோரியும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, தனிப்பட்ட முறையில் அவதூறாக இருந்தால், மேற்கொண்டு பேச தடை விதிக்க முகாந்திரம் உள்ளது என நீதிபதி மஞ்சுளா தெரிவித்தார். மேலும், இபிஎஸ் தொடர்ந்து வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரு வாரங்களுக்கு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. இதுபோன்று, கோடநாடு வழக்கில் இபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், கோடநாடு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடை நவம்பர் 2 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை ஏற்று விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…