தமிழகத்தின் முதல்வராக உள்ளவர் எடப்பாடி கே.பழனிச்சாமி இவருடைய மாவட்டம் சேலம் அம்மாவட்டத்தில் அமைந்துள்ள எடப்பாடி தொகுதி மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதல்வர் பழனிச்சாமி அதனாலே அவரை எடப்பாடி பழனிசாமி என்கின்றனர்.
இந்த நிலையில் முதல்வரின் சொந்த ஊரிலே விளையாட்டு விராங்கணைகள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகின்றனர் என்ற வேதனையான தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.இதனை தொகுதி எம்.எல்.ஏவும்,முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி நடைவடிக்கை எடுப்பாரா என்று சமூக ஆர்வலர்களும்,வீரங்கனைகளும் கேள்வியுடன் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
கவுண்டம்பட்டியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரியான தங்கராஜின் மகள்கள் தமிழரசி மற்றும் வைஷ்ணவி.இவர்களின் தந்தை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஜவுளி முகவராக இருந்தவர் தன்னுடைய மகள்கள் இருவரையும் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கவைத்தார்.
மகள்கள் இருவரும் 10ஆம் வகுப்பு வரை கல்வி, விளையாட்டு மற்றும் யோகா ஆகியவற்றில் சிறந்து விளங்கி மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் பல பரிசுகளை வென்றுள்ளனர்.விளையாட்டு மட்டுமல்லாமல் விராங்கனைகள் இருவருக்கும் 5 மொழிகள் தெரியும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் இருவருக்கும் ஆந்திர மாநிலத்திலுள்ள நாராயணா இன்ஸ்டியூட்டில் 11ஆம் வகுப்பு பயில இடம் கிடைத்துள்ளது. இந்த வாய்பை பயன்படுத்தி கொண்ட வீராங்கனைகள் ஓராண்டு நிறைவடைந்த நிலையில் கேரள வெள்ள பாதிப்பால் தந்தை தங்கராஜ் தன்னுடைய தொழிலில் பலத்த நட்டத்தை சந்தித்துள்ளார்.
இதனால் அவரால் மேற்கொண்டு கட்டணம் செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பணம் கட்டாத காரணத்தால் நாராயணா இன்ஸ்டியூட் நிர்வாகம் 2 மாணவிகளை பள்ளியை விட்டு நீக்கியதாகக் கூறப்படுகிறது. நீக்கப்பட்டதற்கு வீரங்கனைகள் JEE தேர்வு எழுதி ஐஐடியில் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சியாளர்களாக வரவேண்டும் என்ற எங்களின் கனவு இதனால் தகர்ந்துவிட்டது என்று கண்ணீர் ததும்ப கூறுகின்றனர்.
மேலும் பள்ளிக்கு செல்ல முடியாது என்பதால் கடந்த 2 மாதகாலமாக தனது தந்தையின் ஜவுளிக்கடையில் தந்தைக்கு உதவியாக பணி புரிந்து வருகின்றனர். இந்த இரு சகோதரிகளும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அல்லது தன்னார்வலர்கள் தங்களுக்கு உதவிபுரிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாங்கள் விடும் கோரிக்கை கோட்டையை எட்டுமா என்ற ஏக்கத்தில் வீராங்கனை சகோதரிகள்…
DINASUVADU
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…