அரசியல் முதல் கொடநாடு வரை எத்தனையோ பாவங்களுக்கு சூத்திரதாரி பழனிசாமி – துரைமுருகன் அறிக்கை

Default Image

அரசியல் வாழ்க்கை தொடங்கியது முதல் கொடநாடு வரை எத்தனையோ பாவங்களுக்கு சூத்திரதாரி எடப்பாடி பழனிசாமி என்று  திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி இன்று தென்காசியில்  ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் மக்களுக்கு எதையும் செய்யாதவர்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்காது என்று ஸ்டாலினை சாடி பேசினார்.
இவரது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திமுக பொருளாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்காமல், மாவட்டத்தை 2 ஆக பிரித்து புதிய பெயரைச் சூட்டிவிட்டாலே பெரிய சாதனையாக நினைத்துக் கொள்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.
‘ஆட்சியில் இருந்தபோது எந்தச் சாதனையும் செய்யாத மு.க.ஸ்டாலினுக்கு பாவமன்னிப்பு கிடையாது’ என்று புதிய வேடதாரியாக மாறிச் சாபம் விட்டுள்ளார் எடப்பாடி.அரசியல் வாழ்க்கை தொடங்கியது முதல் கொடநாடு வரை எத்தனையோ பாவங்களுக்கு சூத்திரதாரி ஈபிஎஸ் .மறைமுகத்தேர்தல் என்பது ஒருநாள் இரவில் உதயமானதற்கு என்ன காரணம்? தோல்வி பயம் தானே? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Nainar Nagendran - R.S. Bharathi
rain news today
Nellai Iruttukadai Halwa shop
mayank yadav brother
Actor Sri
TN CM MK Stalin speech in TN Assembly