அதிமுகவுக்கு அறிவுரை கூற பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தகுதி இல்லை.! இபிஎஸ் கடும் தாக்கு.!

Default Image

இபிஎஸ் சந்தித்த 3 தேர்தல்களும் தோல்வி. அவர் தலைமையை மக்கள் நிராகரிக்கிறார்கள் என பேசிய பண்ருட்டி ராமசந்திரன் கருத்துக்கு எதிராக இபிஎஸ் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், ‘ அதிமுகவுக்கு அறிவுரை கூற உங்களுக்கு தகுதியில்லை.’ என தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

அதிமுக தற்போது ஓர் நெருக்கடியான சூழலில் இருக்கிறது. அதனை மீட்டெடுக்க ஓ.பன்னீர்செல்வம் போராடி வருகிறார். நாம் அவருடன் துணை நிற்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த 3 தேர்தல்களும் தோல்விதான். அவர் தலைமையை மக்கள் நிராகரிக்கிறார்கள் என்று அதிமுக மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமசந்திரன் கருத்து தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் ,இன்று மின்கட்டண உயர்வுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசியபோது பண்ருட்டி ராமசந்திரன் கூறிய கருத்துக்களை கடுமையாக எதிர்த்தார். மேலும் அவரது அரசியல் நகர்வுகளையும் விமர்சனம் செய்தார்.

அவர் பேசியதாவது, ‘ அம்மா இருக்கும் போதே அதிமுகவில் இருந்து விலகி அம்மாவை பற்றி விமர்சனம் செய்தவர் பண்ருட்டி ராமசந்திரன். அதன் பிறகு பாமகவுக்கு சென்று, அந்த கட்சியை மறந்து, தேமுதிகவுக்கு சென்று வெற்றி பெற்றார். அதன் பிறகு அந்த கட்சியை படுக்க வச்சிட்டார் பண்ருட்டி ராமசந்திரன். அந்த கட்சியை முழ்கடித்துவிட்டார்.

உங்கள் அறிவுரை எங்களுக்கு தேவையில்லை. அதிமுக தற்போது நன்றாக இருக்கிறது. நீங்கள் எங்களை ஏற்றுக்கொண்டால் எங்கள் பாதையை தொடருங்கள். தயவு செய்து குறை கூறாதீர்கள். நான் சந்தித்த தேர்தல் தோல்விதான். ஆனால், இந்த மாதிரியான அதிமுக தொண்டர்கள் போல யாருக்கும் இருக்க மாட்டார்கள்.

எந்த முதலமைச்சரும் பார்க்காத தடைகளை நான் கண்டேன். எனது ஆட்சி காலத்தில் தான் வறட்சி, புயல், மழை எல்லாம் வந்தது. அதனையெல்லாம் சிறப்பாக நிர்வகித்து சரி செய்தேன். நமது கட்சியின் கிளை செயலாளராக தகுதி கூட பண்ரூட்டி ராமசந்திரன் அவர்களுக்கு இல்லை. உங்களுக்கு கட்சி மீது விஸ்வாசம் இல்லை. வேடந்தாங்கல் பறவை போல கட்சி விட்டு கட்சி வந்து நீங்கள் சொல்லும் அறிவுரை எங்களுக்கு தேவையில்லை.’ என மிக கட்டமாக தனது கருத்தை தெரிவித்தார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்