நாம் பெற்ற பிள்ளைக்கு அவர்கள் பெயர் வைக்கிறார்கள்.! திமுகவை கடுமையாக சாடிய எடப்பாடியார்.!
அதிமுக ஆட்சியில் 350 கோடி பட்ஜெட்டில் விருதுநகரில் மருத்வயக்கல்லூரி கட்டினோம். ஆனால் அதனை திமுக அரசு திறந்து வைத்துள்ளது என விமர்சனம் செய்துள்ளார் அதிமுக இடைகால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று அதிமுக ஆட்சி திட்டங்களை நிறைவேற்றாத திமுக ஆட்சியை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார்.
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், விருதுநகரில் இரண்டவதாக மருத்துவக்கல்லூரி அமையவேண்டும் நான் முதல்வராக இருந்தபோது என்னிடம் முறையிட்டார் அப்போதைய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அதன் படி 350 கோடி பட்ஜெட்டில் விருதுநகர் மருத்துவ கல்லூரியை கட்டினோம். ஆனால் தற்போது நாம் பெற்ற பிள்ளைக்கு யாரோ பெயர் வைப்பது போல, திமுக ஆட்சியில் அந்த மருத்துவக்கல்லூரியை துவங்கி வைத்துள்ளனர்.’ என்றும்,
7 சட்டக்கல்லூரிகள், கால்நடை மருத்துவமனை, ஆராய்ச்சி நிலையங்கள், 76 கலை, அறிவியல் கல்லூரிகளை கொண்டு வந்துள்ளோம். இதற்கெல்லாம் சொந்தம் கொண்டாவேண்டியது அதிமுக தான். ஆனால் திமுகாவல், அதிமுக கொண்டுவந்த திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் நிறுத்த தான் முடிந்தது என திமுக அரசை கடுமையாக சாடி பேசியிருந்தார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.