மழைநீர் வடிகால் குறித்து திமுகவினர் தவறான செய்தியை பரப்புகிறார்கள்.! – இபிஎஸ் கண்டனம்.!
சென்னையில் பல இடங்களுக்கு நேரில் சென்று பார்த்தேன். திமுக அரசு ஒரு சொட்டு நீர் கூட இல்லை என கூறி வருகிறார்கள். தவறான செய்தியை திமுகவினர் பரப்பி வருகிறார்கள். – எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து திமுக அரசின் மீது பல்வேறு குற்றசாட்டுகக்ளை முன்வைத்தார்.
அவர் கூறுகையில், ‘வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மிக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் தண்ணீர் குளம் போல தேங்கி இன்னும் வடியாமல் இருக்கிறது . பல இடங்களில் சென்று நேரில் பார்த்தேன். திமுக அரசு ஒரு சொட்டு நீர் கூட இல்லை என கூறி வருகிறார்கள். தவறான செய்தியை திமுகவினர் பரப்பி வருகிறார்கள்.
திருவள்ளுவர் நகர், மணப்பாக்கம் பகுதிகளில் 400 வீடுகள், மதுராந்தபுரம் பகுதிகளில் 500 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் படகில் வந்ததாக கூறினார்கள் . இப்போதும் படகில் தான் மக்கள் வருகிறார்கள். மழைநீர் இன்னும் தேங்கியுள்ள மணப்பாக்கம், மதுராந்தபுரம், விடி அவென்யூ ஆகிய பகுதிகளில் போர்க்கால அடிப்படியில் மழைநீரை வெளியேற்ற வலியுறுத்துகிறேன்.
இன்னும் இந்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படவில்லை.
இன்னும் கனமழை பெய்யவில்லை. இப்பொது ஆரம்பம் ஆகியுள்ளது. அதிமுக ஆட்சியில் 30-40 செமீ மழை பெய்தது. இப்பொது 5-6 செமீ மழைதான் பெய்துள்ளது. அது தானாகவே வடிந்துவிடும். எனவும்,
அதிமுக ஆட்சியில் தான் 2400 கிமீ தூரத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டு 3500 கோடி நிதி ஒதுக்கினோம். அதில் 750கிமீ தூரத்திற்கு பணிகளை தொடங்கினோம். நாங்கள் அறிவித்த திட்டத்தை ரத்து செய்து திமுக மீண்டும் அதே திட்டத்தை செயல்படுத்துகிறது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.