அதிமுக – பாஜக கூட்டணி முறிவு… முதல் முறையாக விஜயபாஸ்கர் வீட்டில் ED ரெய்டு!

Published by
பாலா கலியமூர்த்தி

ED Raid: அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு முதல்முறையாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கருத்து வேறுபாடுகள், வார்த்தை மோதல்களை தொடர்ந்து பாஜவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுக அறிவித்திருந்தது.

Read More – அதிமுக கூட்டணியை இறுதி செய்தது தேமுதிக! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?

இருப்பினும், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு என்பது நாடகம் என்றும் மீண்டும் தேர்தலின்போது ஒன்று கூடுவார்கள் எனவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வந்தது. ஆனால், இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக தலைமை திட்டவட்டமாக தெரிவித்தது. இதனால், இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

அதன்படி, மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல் என தேர்தல் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டிருப்பது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More – திமுகவை முந்திய அதிமுக.. எந்தெந்த தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?

ஏனென்றால், கடந்த பல ஆண்டுகளாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அவருடைய சொத்துக்கள் முடக்கப்பட்டது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில், அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்த வருவதாக கூறப்படுகிறது.

Read More – திமுக வேட்பாளர் வெளியீடு! எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டி? 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்டுகிறது. கடந்த 2021ம் ஆண்டு சட்டவிரோதமாக பணபரிவர்தனையில் ஈடுபட்டதாக ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனவே, இதுவரை வராத அமலாக்கத்துறை பாஜவுடனான கூட்டணி முறிவுக்கு பிறகு தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சோதனையில் ஈடுபட்டுள்ளது.

Recent Posts

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

6 hours ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

9 hours ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

11 hours ago

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

11 hours ago

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

12 hours ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

12 hours ago