“பாஜகவின் அடியாள் ED…அதைவச்சு பழிவாங்குறாங்க”அமைச்சர் ரகுபதி காட்டம்!
கடந்த 10 ஆண்டுகளில் மாற்றுக்கட்சிகள் எங்கெல்லாம் ஆட்சி நடத்திகின்றார்களோ அந்த கட்சிகளை உடைப்பது போன்ற விஷயங்களை தான் பாஜக செய்துகொண்டு இருக்கிறார்கள் என அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டி பேசியிருக்கிறார்.

சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர் தொடர்பாக சுமார் ரூ.1000 கோடி வரையில் ஊழல் நடந்திருக்காலாம் என தெரியவந்ததாகவும் வெளியான தகவல் தான் ஹாட் டாப்பிக்கான ஒரு விஷயமாக வெடித்துள்ளது. இந்த சூழலில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் ஆதாரம் இருக்கிறதா? என்கிற கேள்வியை எழுப்பி பாஜகவை விமர்சனம் செய்தும் பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் ” கடந்த ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி இப்போது பிரதமராக இருக்ககூடிய மோடி அவர்கள் நான் ஆட்சிக்கு வந்தால் மாற்றுக்கட்சிகள் ஆட்சி நடத்தும் இடங்களில் நாங்கள் அவர்களை பழிவாங்கமாட்டோம் என கூறியிருந்தார்கள். ஆனால், அப்படி அவர் சொன்னது போல எந்த விஷயத்திலும் நடந்துகொள்ளவில்லை. 2 லட்சம் ரூபாய் ஒவ்வொரு கணக்கில் போடுவேன் என்று சொன்னார். அது நடந்ததா? இல்லையா என்பது அடுத்தது..
ஆனால், மாற்றுகட்சிகளை பழிவாங்கமாட்டோம் என்று சொன்னார். கடந்த 10 ஆண்டுகளை பார்த்தோம் என்றால் மாற்றுக்கட்சிகள் எங்கெல்லாம் ஆட்சி நடத்திகின்றார்களோ அங்கே அந்த ஆட்சியை மாற்றுவது கட்சிகளை உடைப்பது போன்ற விஷயங்களை தான் பாஜக செய்துகொண்டு இருக்கிறார்கள்.
அவர் மாற்றுக்கட்சிகளை பழிவாங்க பயன்படுத்தி வரும் அடியாட்கள் என்றால் அமலாக்கதுறை தான். அதன் மூலமாக தான் இன்றைக்கு பலரையும் அச்சுறுத்தி பழிவாங்கி வருகிறார்கள். பாஜக கட்சியில் சேர்பவர்களை தவிரித்துவிட்டு யாரெல்லாம் பாஜகவில் சேரவில்லையோ அவர்களை குறி வைத்து அமலாக்க துறையை வைத்து பழிவாங்குகிறார்கள். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ஹிமந்த பிஸ்வா சர்மா, நாராயண் ரானே, அகியோரெல்லாம் பாஜகவில் சேருவதற்கு முன்பு வருமான வரித்துறை வழக்கில் சிக்கினார்கள். பாஜகவில் சேர்ந்த பிறகு அவர்கள் மீது இருந்த வழக்குகள் நீக்கம் செய்யப்பட்டு விட்டது.
இன்று காலை பாஜக சென்னையில் ஒரு ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலை காரணமாக அதனுடைய தலைவராக இருக்க கூடிய அண்ணாமலை முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்த்து குற்றவாளி என கூறி குற்றம்சாட்டியுள்ளார். முழுக்க முழுக்க முதல்வரை பார்த்து இப்படி சொல்லியிருப்பது சட்டவிரோதமான ஒரு செயல்” என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி ” முதலமைச்சரை நீங்கள் குற்றவாளி என்று சொல்வதற்கு ஆதாரம் வைத்திருக்கிறீர்களா? அல்லது ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் ஆதாரம் இருக்கிறதா? ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது. பாஜகவுடைய டெல்லி பாணி எப்போதும் தமிழகத்தில் எடுபடாது” எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.