கஜா புயல் பாதிப்பு எதிரொலி …!புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை …!
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களை ஒரு வழி செய்தது.குறிப்பாக இயற்கை வளங்கள் செழிப்பாக உள்ள மாவட்டங்கள் சிதைந்து கிடக்கிறது.தஞ்சை, நாகை, திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில் சேதங்கள் பல…
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், கஜா புயல் பாதிப்பை தொடர்ந்து நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் விடுமுறை என்றும் தெரிவித்துள்ளார்.